Tuesday 26 February 2013


திருவள்ளுவர் (thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு,மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
திருவள்ளுவரை
·         நாயனார்,
·         தேவர்,
·         தெய்வப்புலவர்,
·         செந்நாப்போதர்,
·         பெருநாவலர்,
·         பொய்யில் புலவர்
·         பொய்யாமொழிப் புலவர்
என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
·         திருக்குறள்
இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் இயற்றியதாக கூறுவர். அவை
·         ஞான வெட்டியான்                                
·         பஞ்ச ரத்னம்
ஆயினும் பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலர் இயற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது . இந்த சிலையை வடிவமைத்தவர் , பிரபல சிற்பி , கணபதி ஸ்தபதி என்பவர்.
சென்னையில் வள்ளுவர் நினைவாக , வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.பார்க்க
லண்டன், ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள "ஸ்கூல் . .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்" என்னும் கல்வி நிறுவனத்தில் , வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது

1 comment: